Sunday, August 17, 2014

விண்டோஸ் 7, 8, 8.1 ரெக்கவரி டிரைவ்

இப்போதெல்லாம் கம்ப்யூட்டரை வாங்கும் போது விண்டோஸ் இன்ஸ்டால் சிடி(CD) டிவிடிகளை(DVD) கொடுப்பதில்லை.உங்கள் கணினி பூட் செய்ய மறுத்துவிட்டால் உங்களுக்கு தேவை பூட்டபில் ரெக்கவரி டிரைவ்(Bootable Recovery Drive ). ஆதனை எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம்.
விண்டோஸ் 7 ல் USB பூட் ரெக்கவரி டிரைவ் கொடுக்கப்படவில்லை.அதற்குபதில் சிடி அல்லது டிவிடி கொண்டு நீங்கள் பூட்டபில் ரெக்கவரி டிரைவ்(bootable recovery drive) உருவாக்கலாம். Windows Key + R அழுத்தி recdisc.exe என கொடுக்கவும். என்டர்( enter ) அழுத்தி பின்வரும் விண்டோவில் கொடுக்கப்பட்டிருக்கும் சிடி(CD) அல்லது டிவிடி(DVD) டிரைவை தேர்வு செய்து பூட்டபில் ரெக்கவரி டிரைவ் உருவாக்கவும்.விண்டோஸ் பூட் ஆப்சனில்(boot option) டிவிடி அல்லது சிடி என கொடுத்து பூட் செய்யதால் நீஙகள் உங்கள் டேட்டாவை ரெக்கவர் செய்து விடலாம். விண்டோஸ் 8ல் இதுபோன்று உபயோகிக்கவும். விண்டோஸ் 8.1 ல் USB மூலம் நீங்கள் ரெக்கவரி டிரைவ் உருவாக்கி கொள்ளலாம். விண்டோஸ் 8.1 ல் மட்டும் இந்த வசதி உள்ளது.

Saturday, August 02, 2014

Tamil Board - தமிழ் பலகை 1.0 வெளியீடு

சிறப்பம்சங்கள்
*தமிழில் டைப் செய்து கருத்துகளை வெளியிட
*எளிதான கீ போர்ட்
*யுனிக்கோடு முறை(unicode characters)
*சோஸியல் நெட்வொர்க்குடன்(Facebook,Whats App, Twitter, g+, gmail, SMS..) தமிழில் பகிர்வு
*எளிதாக தமிழில் டைப் செய்த வார்த்தைகளை காப்பி(copy) செய்யும் வசதி. இதனை எங்கேயும் பேஸ்ட்(paste) செய்து கொள்ளலாம்.

லிங்க்
https://play.google.com/store/apps/details?id=com.vijaynetwork.tamilboard.writer

Thursday, July 31, 2014

வெப்சைட் - டுடோரியல்ஸ் பாய்ண்ட்


பேருக்கேற்றாற்போல் இந்த வெப்சைட்ல் என்னற்ற புரோகிராமிங்கிற்கு டுடோரியல்( Tutorial ) உள்ளது. படிக்க எளிமையாகவும் விரிவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. JAVA, HTML5, JAVA, C, C++ ,PHP ,Perl ,Ruby ,Android ,iOS ,Phython போன்றவை படிப்பதற்கு ஏற்ற தளம். மாணவர்களுக்கு மிக உதவிகரமாக இருக்கும்.

லிங்க்:
http://www.tutorialspoint.com

Saturday, July 19, 2014

பிக்ஸ் இட்

உங்கள் கம்ப்யூட்டரில் எதேனும் புரோகிராம் இன்ஸ்டால் அல்லது அன்-இன்ஸ்டால் செய்யும் போது பிரச்சனை உள்ளதா? அதாவது விண்டோஸ் ரிஜிஸ்ரியில்(registry) பிரச்சனை இருந்தாலோ அல்லது பாதிப்படைந்து இருந்தாலோ உங்களால் குறிப்பிட்ட புரோகிராமினை இன்ஸ்டால் செய்யவோ அல்லது அன்-இன்ஸ்டால்( Install/Uninstall ) செய்யவோ முடியாது. இதற்காகவே மைக்ரோசாப்ட்  நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 'பிக்ஸ் இட்' ( Fix It ) என்னும் மென்பொருளை. வழங்கியுள்ளது. இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் எற்படும் இன்ஸ்டால் அல்லது அன்-இன்ஸ்டால் பிரச்கனைகளை தீர்க்கலாம்.

லிங்க்:
http://support.microsoft.com/mats/program_install_and_uninstall/en

Monday, July 14, 2014

'தமிழ் கம்ப்யூட்டர் 1.0' புதிய அன்ட்ராய்டு அப்ளிகேஷன் வெளியீடு

தமிழ் கம்ப்யூட்டர் பக்கங்களை இனி ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் வழியாக பார்க்கலாம்..

இயங்கு தளம்:
ஆன்ட்ராய்டு 2.2 மற்றும் அதற்கு மேல்

பதிப்பு
1.0

அளவு
1.8MB

இணைய இணைப்பு: தேவை

லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.vijaynetwork.tamilcomputer.tamilapp


Monday, June 23, 2014

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-12

binary coded character – ருமக் குறிமுறை உரு
binary coded decimal(BCD)- ருமக் குறிமுறை பதின்மம்
binary device – ரும நிலைச் சாதனம்
binary digit – ரும லக்கம்
binary file – ருமக் கோப்பு
binary notation – ருமக் குறிமானம்
binary number – ரும எண்
binary operation – ருமச் செயல்பாடு
binary point – ருமப் புள்ளி
binary search – ருகூறாக்கித் தேடல்
binary system – ரும எண்முறை
binary-to-decimal conversion- ரும பதின்ம மாற்றம்
binary-to-gray code conversion – ரும-சாம்பல் குறிமுறை மாற்றம்
binary-to-hexadecimal conversion- ரும-பதின்அறும மாற்றம்
binary-to-octal conversion- ரும-எண்ம மாற்றம்
binding time – பிணைப்பு நேரம்
biochip – உயிரிச் சில்லு
bionics – உயிர் மின்னணுவியல்
BIOS – Basic Input/Output System -என்பதன் குறுக்கம்: அடிப்படை உள்ளிடு-வெளியிடு அமைப்பு

Friday, June 20, 2014

நூறு கோடி - ஜிமெயில்

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் ஜிமெயில் அப்ளிகேஷனை இதுவரை, கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நூறு கோடிக்கும் அதிகமானவர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவதாக, கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, சுந்தர் பிச்சை தன் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள அப்ளி கேஷன் இந்த அளவிலான எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே Google Search, Facebook மற்றும் Google Maps ஆகிய அப்ளிகேஷன்கள் 50 கோடியைத் தாண்டி 100 கோடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tuesday, June 10, 2014

புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் - லைவ் சேனல்ஸ் 1.0( Live Channels )

புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் - லைவ் சேனல்ஸ் 1.0( Live Channels )
* TV9* NTV* Sunnews-Tamil* AajTak* ABN* TimesNow* Zee News* ETV Live* Bhakthi* TOLO NEWS

நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியை காண புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்..
https://play.google.com/store/apps/details?id=com.vijaynetwork.livechannels.livetv

Monday, June 09, 2014

திரை கீ போர்ட்( On-Screen Keyboard )

எப்பொழுதாவது உங்கள் கீ போர்டை உடனடியாக உபயோகிக்க முடியாமல் போனால் வின்டோஸ்ல் உள்ளமைந்துள்ள(inbuilt) திரை  கீ போர்டை( On-Screen Keyboard ) மவுஸ் வழியாக உபயோகிக்கலாம்..அதனை கொண்டு வர வழிமுறைகள் இங்கே..ரன் மெனுவில் 'osk' என டைப் செய்து என்ட்டரை(enter) தட்டவும்..உடனே மவுஸ் வழி இயங்கும் கீ போர்டானது தோன்றும்..இதை உபயோகித்து டைப் செய்து கொள்ளலாம்.

Tuesday, May 27, 2014

இன்டர்நெட் இன்பர்மேசன் சர்விஸ் ( IIS ) @ Win 7

இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தே .ASP , .AXD, .SOAP, ASPX, .SHTML, .STM, .AXD, .ASMX, .PHP போன்ற பைல்களை சோதனை செய்து கொள்ளலாம்..

வெப் டிசைன்(web design) செய்பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.. இதனை Windows 7 ல் இன்ஸ்டால் செய்ய பின்வரும் லிங்கை கிளிக் செய்து அதில் கூறிய படி செய்யவும்..

லிங்க்..
http://www.iis.net/learn/install/installing-iis-7/installing-iis-on-windows-vista-and-windows-7