Friday, November 19, 2010

கூகுள் லோகோஸ்


உங்கள் பிரவுசரில் Google.com செல்லுங்கள். அங்கு தேடுதல் கட்டத்தில் “Google Logos” என டைப் செய்திடவும். கிடைக்கும் லிங்க்ஸ் பட்டியலில், முதலில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்து செல்லவும். உடனே, 2000 ஆண்டு முதல், கூகுள் காட்டிய அனைத்து லோகோக்களும் வைத்திருக்கும் தளத்திற்குச் செல்வீர்கள். பார்த்து ரசியுங்கள்.

Tuesday, October 26, 2010

நம் கண்கள்


நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதனாலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த
ஆய்வுகள் கூறும் சில பயனுள்ள தகவல்களை இங்கு பார்ப்போம்.

1. கம்ப்யூட்டர் இடம்: முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதே போல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்கள், வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

2. ஒளி அமைப்பு: அறையில் ஒளி அமைப்பு நம் கண்களுக்கு பலவகையில் சோதனைகளைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப்படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும். நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணி புரிவீர்கள் என்று கூறவும். இப்போது இந்த மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியினை வடிவமைப்பார்கள்.

3. 20:20:20 விதி: மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணி புரிந்து கொண்டிருந்தால், அதிக பட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்கு புத்துணர்வைத் தரும்.

பொதுவாக ஒரு நிமிடத்தில் நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறை தான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை சிமிட்டவும்.

ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயாமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின்
திரும்ப பணியாற்ற வரவும்.

3. இதமான சூடு தேவை: கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண்களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.

4. தண்ணீர் கொண்டு அடித்தல்: இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

5. தேயிலை பைகள்: பயன்படுத்திய இரண்டு தேயிலை பைகள், அல்லது அந்த அளவில் மென்மையான மடிக்கப்பட்ட நனைக்கப்பட்ட துணியை, அலுவலகத்திற்குச் செல்கையில் பிரிஜ்ஜில் வைத்து செல்லவும். பின்னர், அங்கிருந்து வந்தவுடன், அதனை எடுத்து, கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருக்கவும். இது வேலை மிகுதியால், கண்களில் ஏற்படும் சிறிய வீக்கத்தினைக் கட்டுப்படுத்தும்.

6. வைட்டமின்கள்: ஊட்டச் சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும்.
கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடவும்.

PDF பைல் தயாரிக்க இலவச மென்பொருள்

PDF பைல் தயாரிக்க வேண்டுமா? இங்கே சென்று http://www.dopdf.com/ இறக்குமதி செய்து கொள்ளுங்கள்.

Thursday, October 14, 2010

புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் - விண்டோஸ் போன் 7

மைக்ரோசாப்ட் நிறுவனம், மொபைல் போனுக்கான புதிய ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தினை அண்மையில், தன்னுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல்பாடு களில் இது ஒரு பெரிய சாதனை என அனைவரும் எண்ணுகின்றனர். மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு இதனை வழங்கும் முன், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மொபைல் மாடல்களில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் சோதனை செய்து பார்க்கப்பட்டது.

பல்வேறு சோதனைகள் 35 லட்சம் மணி நேரப் பயன்பாட்டில் மேற்கொள்ளப் பட்டன. வெகு விரைவில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் மொபைல் ஃபோன்கள் நமக்குக் கிடைக்க இருக்கின்றன. ஒரு மாதத்திற்குள் இவை வெளிவரலாம். எந்த நிறுவனம் நமக்கு இந்த புதிய அனுபவத்தினைத் தரப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்ப்போம்.

AVG Antivirus Free Edition 2011

ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு என்ற அளவில் மிகவும் பிரபலமான ஒரு நிறுவனம் ஏவிஜி நிறுவனம் ஆகும். கட்டணம் செலுத்திப் பெறும் தொகுப்புடன், இலவசமாகப் பயன்படுத்தவும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை, இந்த நிறுவனம் தந்து வருகிறது. அந்த வரிசையில், அண்மையில் இதன் மேம்படுத்தப்பட்ட இலவச தொகுப்பு வெளியாகியுள்ளது.

'AVG Antivirus Free Edition 2011' என அழைக்கப்படும் இந்த தொகுப்பில், வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு, ஸ்பைவேர் தொகுப்பு,இமெயில் ஸ்கேனர்,ரெசிடென்ட் ஷீல்ட் என்னும் பாதுகாப்பு வளையம், இணைய தள தொடர்புகளை அலசிப் பார்த்து எச்சரிக்கும் லிங்க் ஸ்கேனர், ஆண்ட்டி ரூட் கிட் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் ஸ்கேனர் ஆகியவை அடங்கியுள்ளன. இதற்கு முன் வெளியான ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளுடன் இணைந்து இயங்கும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது.

இதனை இலவசமாகத் தரவிறக்கம் செய்திட http://free.avg.com/in-en/download-avg-anti-virus-free என்ற இணைய முகவரிக்குச் செல்லவும்.

Saturday, October 02, 2010

கம்ப்யூட்டரைப் பராமரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள்

கம்ப்யூட்டரைப் பராமரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அந்த வகையில் அண்மையில் கிடைக்கும் ஒரு தொகுப்பு மிகப் பயனுள்ள வகையில் பல பராமரிப்பு பணிகளை, எளிதாக மேற்கொள்கிறது. இதனை இயக்க, நமக்கு தொழில் நுட்ப உத்திகள் எதுவும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. இதன் பெயர் ஸ்லிம் கிளீனர் (Slim Cleaner). இதன் சோதனைத் தொகுப்பு தான் இப்போது வந்துள்ளது. இருப்பினும் செயல்பாட்டில் எந்த குறையும் இல்லாமல் இது பயனுள்ள முறையில் இயங்குகிறது.

இந்த வகையில் ஏற்கனவே பலருக்குத் தெரிந்த தொகுப்பான CCleaner போலவே இந்த புரோகிராமும் செயல்படுகிறது. சுத்தப்படுத்துவதற்கென நீக்கப்படும் டேட்டாவினை Windows, Applications மற்றும் Browsers என்ற மூன்று பிரிவுகளில் காட்டுகிறது. இந்த டேப்கள் மேலும் சில பிரிவுகளாக (Windows History, Productivity மற்றும் FileSharing) அமைக்கப் படுகின்றன.

ஒவ்வொரு பிரிவிலும் ஒரே புரோகிராமில் உள்ள தேவையற்ற டூப்ளிகேட் டேட்டாக்கள் காட்டப்பட்டு நீக்கப்படுகின்றன. Analyze என்ற பட்டனில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் சிஸ்டம் முழுமையாக ஸ்கேன் செய்யப்படுகிறது. இறுதியில் ஒவ்வொரு புரோகிராம் பிரிவிலும், நீக்கப்பட வேண்டிய டேட்டா காட்டப்படுகிறது. இப்படி ஒவ்வொரு பிரிவிலும் டேட்டாவினைப் பார்த்திடாமல், நேரடியாகவே அனைத்து வேண்டாத டேட்டாக்களையும் நீக்கும் வழியும் உள்ளது.

இந்த புரோகிராமினை http://slimcleaner.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக, டவுண்லோட் செய்திடலாம்.



Tuesday, September 28, 2010

ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க

ஜிமெயில் இலவசமாக இருப்பதனால் மட்டுமின்றி, அதன் அளவற்ற ஸ்டோரேஜ் இடம், கூடுதல் வசதிகள், இணைந்த அதிவேக தேடல் வசதி, இதனால் கிடைக்கும் மற்ற கூகுள் தள வசதிகள் ஆகியவற்றால், இணையம் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயில் அக்கவுண்ட் வைத்துள்ளனர். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்களை வெவ்வேறு பெயர்களில் வைத்துள்ளனர். ஆனால் இதில் ஒரு சிக்கல் எழுகிறது. சில பிரவுசர்கள், ஒரு நேரத்தில் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை மட்டுமே திறக்க அனுமதிக்கின்றன.

எடுத்துக் காட்டாக, நான் பயர்பாக்ஸ் பிரவுசரில், முதலில் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறந்து பார்த்து, பின்னர், இன்னொரு டேப்பில் அடுத்த ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறந்தேன். என்னைக் கேட்காமலேயே, முதல் அக்கவுண்ட் முடித்துவைக்கப்பட்டது. இது ஏன் என ஆங்காங்கே சென்று பார்த்தபோது, அது அப்படித்தான் என்பது போல செய்தி கிடைத்தது. ஆனால் இன்னொரு வழியை இங்கு கையாண்டேன். இன்னொரு முறை பயர்பாக்ஸ் பிரவுசர் ஐகானில் கிளிக் செய்து, இரண்டாவதாகவும் இந்த பிரவுசரில், ஜிமெயில் தளம் திறந்து, இன்னொரு அக்கவுண்ட்டைத் திறந்தேன். இரண்டும் இயங்கியது. மூடப்படவில்லை.

ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 பிரவுசரில் இதற்கு வேறு ஒரு வழி கிடைத்தது. அதன் படி, முதலில் இந்த பிரவுசரைத் திறந்து கொள்ளவும். ஜிமெயில் தளம் செல்லவும். அங்கு “Remember Me” என்ற ஆப்ஷன் இயக்கப்படவில்லை என்பதனை உறுதி செய்து கொள்ளவும். இதன் பின்னர், முதல் அக்கவுண்ட்டினை சைன் இன்(Sign In) செய்து திறக்கவும்.

அடுத்து, ஆல்ட்+ எப்+ஐ அழுத்தவும். பின்னர் என்டர் தட்டவும். இதனால், இன்னொரு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கம் (Session) ஒன்று திறக்கப்படும். இங்கு மீண்டும் ஜிமெயில் தளம் சென்று,“Remember Me”என்ற ஆப்ஷன் இயக்கப்படாமல், அடுத்த அக்கவுண்ட்டினை சைன் இன் செய்திடவும். இதே போல ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்களைத் திறக்க அனுமதிக்காத, வெப் மெயில்கள் அனைத்தையும் இந்த முறையில் திறந்து பயன்படுத்தலாம்.

Monday, August 30, 2010

பயாஸ் (BIOS Basic Input Output System)

பயாஸ் (BIOS Basic Input Output System) : அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களின் மதர் போர்டிலும் இணைத்து அமைக்கப்பட்ட சிறிய புரோகிராம். ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம். ஒரு கம்ப்யூட்டருக்கு மின்சக்தியை அளித்து இயக்குகையில் இந்த புரோகிராம் உடனே இயங்கி ஹார்ட் டிஸ்க், கீ போர்டு மற்றும் தேவயான சார்ந்த சாதனங்கள் எல்லாம் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதனைத் தேடிப் பார்த்து சரியான பின்னரே முழுமையாக இயக்கத்திற்கு வழி விடும். இல்லை என்றால் என்ன குறை என்பதனைத் தெரியப்படுத்தும்.

இணையத்தில் தமிழ் அகராதி


http://www.tamildict.com

Monday, August 16, 2010

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9

வரும் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் பதிப்பு 9ன் சோதனைத் தொகுப்பு வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. அதிகம் பேர் இந்த தொகுப்பைப் பயன்படுத்தத் தொடங்கு கையில், மைக்ரோசாப்ட் தரும் பிங் தேடல் சாதனத்தினையும் அவர்கள் பயன்படுத்த முயற்சிப்பார்கள். அதனால், தேடல் வகை வருமானம் அதிகமாகும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.

Monday, July 19, 2010

புதிய மாற்றங்களுடன் பயர்பாக்ஸ் (firefox) பதிப்பு

மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் புதிய பதிப்பினை (பதிப்பு 4.0.) பல மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளது. இனி வரும் பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்புகள், இந்த புதிய கட்டமைப்பில் தான் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை பதிப்புதான். யார் வேண்டுமானாலும் இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தி, இதன் நிறை மற்றும் குறைகள் குறித்து மொஸில்லாவிற்குத் தெரிவிக்கலாம்.

சோதனைப் பதிப்பினை http://www.mozilla.com/enUS/firefox/beta/ என்ற முகவரி யில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Monday, July 05, 2010

உங்களால் முடியுமா?

Windows XP professional-யில் இந்த போல்டரை உங்களால் உருவாக்க முடியுமா?
'aux'
முடிந்தால் உங்களுக்கு ஒரு சபாஷ்..


Try to create a folder in 'Windows XP Professional' named as 'aux'
If you did, its great..