Saturday, June 25, 2011

BYWIFI வீடியோ டவுன்லோட்

வீடியோ டவுன்லோட் மற்றும் வீடியோ ஸ்டீரிமிங்(video streaming) வேகத்தை அதிகப்படுத்த இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. Youtube, Dailymotion, Metacafe, MySpace, Yahoo, Justin.tv போன்ற பல வெப்சைட்களில் உள்ள வீடியோவை தரவிரக்கம் செய்ய உதவுகின்றது. நீங்கள் வீடியோ பார்க்கும் போதே இந்த சாப்ட்வேரில் டவுன்லோட் துவங்கிவிடுகின்றது. அதுபோக வீடியோ டவுன்லோட் வேகத்தையும் அதிகரிக்கின்றது.

நீங்கள் இதை இன்ஸ்டால்(install) செய்ததும் டாஸ்க்பாரில் உட்கார்ந்துவிடும். நீங்கள் வீடியோ பார்க்கும் போது இதில் டவுன்லோட் தொடங்கிவிடும். 100% டவுன்லோட்(download) முடிந்ததும் நீக்கள் உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்துக் கொள்ளலாம்.

மேலும் டவுன்லோட் செய்த வீடியோவின் பார்மேட்டை(format) இதன் Bywifi Media Transcoder உதவியுடன் விரும்பிய பார்மேட்டில்( AVI, MP4, MP3, ASV..) மாற்றிக்கொள்ளலாம்.

FLV பார்மேட்டில் டவுன்லோட் செய்த பைல்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரு FLV பைலாக மாற்றும் வசதியும் இதன் Bywifi FLV Merger ல் உண்டு.

Bywifi Media Transcoder, Bywifi FLV Merger, Bywifi Dowloader ஆகிய அனைத்தும் இன்ஸ்டால் செய்யும் போது இணைக்கப்படுகின்றது. ஒரே கல்லில் மூன்று மாங்காய்.

இது முற்றிலும் இலவசமாக(freeware) கிடைக்கின்றது.

டவுன்லோட் லிங்க்
http://www.bywifi.com/

Wednesday, June 22, 2011

மோடம்

மோடம்(Modem - Modulator/Demodulator) என்பது இன்டர்நெட்(internet) பயனுக்காக பயன்படுத்தப் படுகின்ற ஒரு சாதனமாகும். இந்த மோடமானது டிஜிட்டர் சிக்னலை(digital signal) அனலாகாக(analog) டெலிபோன் லைன்க்கு(telephone line) மாற்றுகின்றது. மோடத்தின் துணை கொண்டு இன்டர்நெட்டில் நாம் அனுப்பும் தகவல்கள் மற்றொரு இடத்திற்கு சென்றடைகின்றன.
மோடத்தில் பலவகை உண்டு.

அவையாவன,
  • Internal Modem
  • External Modem
  • Voice Modem
  • Fax Modem
  • Video Conference Modem

Monday, June 20, 2011

செய்தி - ஜூன் 30 முதல் 25 பைசா செல்லாது


மும்பை:இந்தியாவில், ஜூன் 30ம்தேதிக்கு பிறகு 25 பைசா செல்லாது என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:25 பைசா மற்றும் அதற்கு குறைந்த மதிப்புள்ள நாணயங்கள், வரும் ஜூன் 30ம்தேதிக்கு பிறகு செல்லாது. இந்த நாணயங்களை வைத்திருப்@பார், அவற்றை ரிசர்வ் வங்கி அல்லது பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள், குறிப்பிட்ட அன்னிய வங்கிகள், கிராம மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் ஜூன் 29ம்தேதிக்குள் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். வங்கிகள் அவற்றின் கிளைகளில் உள்ள சில்லரை நாணய மாற்று பிரிவில், 25 பைசா மற்றும் அதற்கு குறைந்த மதிப்பு கொண்ட நாணயங்களை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும். ஜூன் 30ம்தேதிக்கு பிறகு 25 பைசா நாணயங்கள் செல்லாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அனைத்து வங்கிகளிலும்சேகரிக்கப்படும் 25 பைசா நாணயங்கள் உருக்கப்படும். உருக்கிய உலோகத்தை என்ன செய்வது என்பது குறித்து மத்திய அரசு பின்பு முடிவு செய்யும்.

Thursday, June 16, 2011

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி

Abacus-மணிச்சட்டம்

Abbreviated addressing-குறுக்க முகவரி முறை

Abend-யல்பிலா முடிவு

Abort-முறித்தல்

Abscissa-கிடையாயம்

Absolute Address-தனி முகவரி

Absolute Coding-தனிக் குறிமுறையாக்கம்

Absolute Movement- தனி நகர்வு

Acceptance Test- ஏற்புச் சோதனை

Access- அணுக்கம், அணுகல்

Access Arm-அணுகு கை

Access Code- அணுகு குறிமுறையாக்கம்

Access Mechanism- அணுகுஞ் செயலமைப்பு

Access Method-அணுகு முறை

Access Time-அணுகு நேரம்

Accessory-துணை உறுப்பு

Accumulator-திரட்டி திரளகம்

Wednesday, June 08, 2011

தமிழ் செய்திதாள்கள்

  • தினமலர்
  • தினகரன்
  • தினபூமி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தமிழ்முரசு
  • மாலைமலர்
  • தென்செய்தி
  • மாலைச்சுடர்
  • முரசொலி
  • வெப்சைட்டில் மெகா சீரியல்

    கீழ்காணும் வெப்சைட்டில் சன், கேப்டன் டிவி செய்திகள் மற்றும் காமெடி, மெகா சீரியல்கள் இடம் பெற்றுள்ளன.பார்த்து மகிழுங்கள்.

    நாதஸ்வரம்
    http://blog.techsatish.net/2010/04/natheswaram-serial-index.html

    மெட்டிஒலி
    http://blog.techsatish.net/2010/03/metti-oli-serial-index.html

    திருமதி செல்வம்
    http://blog.techsatish.net/2010/04/thirumathi-selvam-serial-index.html

    கூகுள் குரோம் வெப்-ஸ்டோர்


    கூகுள் குரோம் வெப்பிரவுசர்(google chrome browser) வழங்கும் வெப் ஸ்டோர்(Web Store) ல் பல அப்பிளிக்கேசன்ஸ்(applications) மற்றும் கேம்ஸ்(games) இலவசமாக கிடைக்கின்றன. அப்பிளிக்கேசன்ஸை எளிதாக இன்ஸ்டால் செய்து பிரவுசரிலேயே இயக்கலாம். இன்ஸ்டால் செய்த கேம்ஸ் மற்றும் அப்பிளிகேசன்ஸ் பிரவுசரிலேயே இணைக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் பிரவுசரை இயக்கி அப்பிளிகேசனை இயக்க முடியும். மேலும் பல தீம்கள்(themes) மற்றும் எக்ஸ்டென்ஸஸ்(extensions) குரோம் பிரவுசருக்கென கிடைக்கின்றன.


    வெப் ஸ்டோர்(Web store)




    சில முக்கியமான கேம்ஸ் மற்றும் அப்பிளிகேசன்ஸ்
    கோபக்கார பறவைகள்( Angry Birds )

    பிரைவேட் ஜோ( Private Joe )


    குயிக் நோட்ஸ்(Quick Notes)

    அட்வான்ஸ்டு இமேஜ் எடிட்டர்(Advanced Image Editor)

    குறிப்பு: இந்த அப்பிளிக்கேசன்ஸ் மற்றும் கேம்ஸ் கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே சிறப்பாக இயங்கும்.