Saturday, April 30, 2011

வந்துவிட்டது வெள்ளை நிற‌ ஐபோன் 4

வெள்ளை நிற‌ ஐபோனை (4) அறிமுகப்படுத்திய பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஆப்பிள் நிறுவன உயர் அதிகாரி பில் ஷில்லர் கூறியதாவது, தற்போது நடைமுறையில் உள்ள ஐபோனுக்கும், இந்த வெள்ளை ஐபோனுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்றாலும், இது சற்று தடிமனானது. கருப்பு ஐபோனை விட, இந்த வெள்ளை ஐபோன் 4, 0.2 மிமீ தடிமன் கொண்டது என்றும், மெட்டல் ஆண்டெனா இரண்டிலும் ‌ஒரேபோல் உள்ளபோதிலும், கிளாஸ் பேனல்கள், புதிய ஐபோனில் சற்று தடிமனாக உருவாக்கப்பட்டுள்ளது. புறஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் விதமாக, இதில் சிறப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Thursday, April 28, 2011

பள்ளி பாடப்புத்தகங்கள்

தமிழ்நாடு அரசு பள்ளி பாடப்புத்தகங்கள்(1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை ) பிடிஎப்(PDF) வடிவில்..டவுன்லோட்( Download ) செய்ய இங்கே செல்லவும்
http://www.textbooksonline.tn.nic.in

சமச்சீர் கல்வி 10ம் வகுப்பு பாட நூல்கள் டவுன்லோட்( Download ) செய்ய

Wednesday, April 27, 2011

இலவசமாக மொபைல் அப்பிளிகேஷன்ஸ்

இலவசமாக மொபைல் அப்பிளிகேஷன்ஸ்( Free Mobile Applications) டவுன்லோட்( Download ) செய்ய இங்கே செல்லவும்..

http://www.freewarelovers.com/

அன்ட்ராய்டு(ANDROID), பால்ம்(PALM OS), பிளாக்பெர்ரி(BLACKBERRY), சிம்பியன்(SYMBIAN) போன்ற மொபைலுக்கான இலவச அப்பிளிக்கேஷன்கள் இங்கே கிடைக்கின்றன.

Tuesday, April 26, 2011

உங்கள் வெப்சைட் மதிப்பு எவ்வளவு?!

ஒரு வெப்சைட்டினை மதிப்பீடு(website value) செய்வது எப்படி? வெப்சைட்டின் பண விகிதம், விளம்பரங்கள் மூலம் எவ்வளவு வருவாய் ஈட்டும்? என்பதை தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்..


இந்த பிளாக்கின் மதிப்பு $58 என காட்டுகின்றது..பலே!! பலே!!
அலக்ஸா ரேங்க்(Alexa Traffic Ranking): 9,067,664

Monday, April 25, 2011

விண்டோஸ் கிளினர்


விண்டோஸ் சிஸ்டம் இயக்கத்தில், பைல்களை நிர்வகிப்பதில் உலகளவில் பயன்படுத்தப்படும் புரோகிராம்களில் புகழ் பெற்றது சிகிளீனர் (CCleaner) ஆகும். அவ்வப் போது ஏற்படும் தற்காலிக பைல்கள், குக்கீஸ், தேவையற்ற ரெஜிஸ்ட்ரி குறியீடுகள் போன்றவற்றை நீக்கி, ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்து வதில் சிறப்பாக இது இயங்குகிறது. இதனைத் தயாரித்து வழங்கும் பிரிசாப்ட் (Pirisoft) நிறுவனம், அண்மையில் இதன் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பினை (பதிப்பு 3.0.5) வெளியிட்டுள்ளது. http://www.piriform.com/ccleaner/download/standard என்ற முகவரியில் உள்ள இதன் இணைய தளத்திலிருந்து இந்த புரோகிராம் பைலை இறக்கி, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

Wednesday, April 20, 2011

வெப்சைட் - VOIP கைடு

உலக நாடுகளுக்கு போன் பேச வேண்டுமா?அதற்கு ஏற்ற VOIP சாப்ட்வேர் எது? மிகவும் குறைவான கட்டணம் வசூலிப்பது எந்த சாப்ட்வேர். காலின்(calling) தரம் சாப்ட்வேர் உபயோகிக்கும் முறை அனைத்தும் சரியாக உள்ளதா? இப்படி பல விசயங்களை ஆராய்கின்றது இத்தளம். மிகவும் உதவியான தளம்.
வெளிநாடுகளுக்கு VOIP மூலம் கால்(call) பண்ண வேண்டும் என நினைப்பவர்களுக்கு இத்தளம் உதவியாக உள்ளது.

Monday, April 18, 2011

C புரோகிராமிங் - பகுதி 3

சி 1969 முதல் 1973 இடையேயான காலத்தில் டென்னிஸ்ரிச்சி(Dennis Ritchie) என்பவரால் பெல் (AT&T Bell Telephone Laboratories) சோதனைக்கூடத்தில் உருவாக்கப்பட்டது.

யுனிக்ஸ் என்பது ஒரே நேரத்தில் பல வேலை செய்யக்கூடிய (Multi-tasking) மற்றும் பல பயனாளர்கள் (Multi-User) கையாளக் கூடிய இயக்குதளமாகும்(Operating System).1969ல் முதலில் யுனிக்ஸானது அஸம்பிளி லாங்குவெஜால் (Assembly Language) AT&T Bell Telephone Laboratories நிறுவன பணியாளர்களால் உருவாக்கப்பட்டது. அதில் டென்னிஸ் ரிச்சியும் ஒருவர்.

பின் 1973ல் யுனிக்ஸ் முழுமையும் சியால் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. இதில் சியானது மேலும் பல சிறப்புகளை புகுத்த உதவியது. மேலும் வேறுபட்ட வன்பொருளிளும் யுனிக்ஸை எளிதாக புகுத்தி (Portable)இயங்கும்படி செய்வதில் சி உதவியது.

சியில் எழுதப்பட்ட புரோகிராமானது எந்தவொரு ஆப்பரேட்டிங்சிஸ்டத்திலும் கம்பைலர் உதவிகொண்டு மெசின் கோடாக மாற்றி நாம் இயக்கவல்லது. இதற்கு நாம் கோடில் ஒருசில மாற்றங்களை செய்தாலே போதுமானது.சியானது எளிதாக வன்பொருளின் நினைவகத்தை கையாளக்கூடியது. எனவேதான சி-யானது மைக்ரோ கண்ரோலர் (Micro Controller) முதல் சூப்பர் கம்யூட்டர் (Super Computer) வரை உபயோகிக்கப்படுகின்றது.

சி-யில் எழுதப்பட்ட புரோகிராமை இயக்க நமக்கு கம்பைலர் உதவியாக உள்ளது. டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சி கம்பைலர்கள், விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் கம்பைலர்கள், யுனிக்ஸ் இயக்கத்தில் இயங்கும் கம்பைலர்கள் உள்ளன். இவற்றிற்குள்ள ஒரே வேறுபாடு பிராசசர் அளவு மட்டுமே.

நீங்கள் உங்களுக்கு பிடித்த, தகுந்த கம்பைலரை உபயோகித்து புரோகிராம் எழுதிபார்க்கலாம்.சில கம்பைலர்களை பற்றி அடுத்த பதிப்பில் பார்க்கலாம்..

Friday, April 15, 2011

கம்ப்யூட்டர் சிரிப்பு


கம்ப்யூட்டர் படித்த மாப்பிள்ளையை நிச்சயம்பண்ணுனது தப்பாப்போச்சு..

ஏன்?என்னாச்சு?வரதட்சணை அதிகமா கேக்குறாரா?

அப்படி கேட்டுடாதான் பரவாயில்லையே ஹம்..வீடியோ காண்பரன்சிலதான் தாலிய கட்டுவேனு ஒத்த காலுலல்ல நிக்குறாரு..

பிரின்ட் வெப்சைட்


இணைய பக்கத்தை நீங்கள் விரும்பிய வண்ணம் பிடிஎப்(PDF) ஆக ஆன்லைன்ல்(online) மாற்றுங்கள்.
இங்கே சென்று உங்களுக்கு பிடித்த இணையதளத்தின்(webpage) முகவரியை கொடுத்து அதனை பிடிஎப்(PDF), ஆகவோ ஹச்டிமெல்(HTML) ஆகவோ அல்லது நேரடியாக பேப்பரில் பிரின்டோ எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறு செய்கையில் உங்களுக்கு அந்த இணையதளத்தில் வரும் படங்கள், விளம்பரங்கள் இணைக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பதையும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். சந்தோஷம்தானே?!

Wednesday, April 13, 2011

விண்டோஸ்-7 பூட் டைம் குறைக்க


சில நேரங்களில் விண்டோஸ் பூட்(boot) ஆக நேரம் எடுக்கும். அதற்கு முக்கிய காரணம் கணினி இயக்கத்தை துவங்கும்போது போது பல புரோகிராம்கள் தங்கள் இயக்கத்தை ஆரமிக்கின்றன.

இதனை தடுத்தாலே பூட்(boot) வேகம் அதிகரிக்கும். அதற்கான வழிகள்,
  • கிளிக் ஸ்டார்ட் பட்டன்
  • msconfig என டைப் செய்து தேடவும்
  • System Configuration என்ற டயலாக் பாக்ஸ் தோன்றும்
  • Startup என்ற டேபை தேர்வு செய்யவும்
அதில் உள்ள உங்களுக்கு தேவையில்லாத பூட் நேரத்தில் இயங்கும் அப்பிளிகேஷன்களை டிக்கை(tick) நீக்கி 'Apply' பட்டனை அமுத்தவும்.

அடுத்தமுறை கம்யூட்டர் பூட்டாகும் போது
நீங்கள் நீக்கிய புரோகிராம்கள் துவங்காமல் இருக்கும். கணினியின் பூட்(boot) நேரமும் மிச்சமாகும்.



விண்டோஸ் 7 ஸ்டிக்கி நோட்ஸ்
ஸ்டார்ட் சர்ச் பாக்ஸில், sticky என டைப் செய்திடவும். இதன் மூலம் ஸ்டிக்கி நோட்ஸ் சிறிய புரோகிராமினை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம்.

Monday, April 11, 2011

வந்துவிட்டது யுஸ்பி 3


இதுவரை யுஸ்பி-2(USB-2) வை நாம் உபயோகித்து வந்த நமக்கு யுஸ்பி-3(USB-3) ஒரு வரப்பிரசாதம். யுஸ்பி-3யானது யுஸ்பி-2 வை விட 10 மடங்கு வேகத்துடன் இயங்கவல்லது. யுஸ்பி-3ல் சில பின்கள்(pins) புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இது நொடிக்கு 3.2 முதல் 4 ஜிகாபைட்(gigabyte) வேகத்திற்கு உதவுகின்றன. ஒரே நேரத்தில் டேட்டாவை வேகமாக அனுப்பவும் பெறவும் இதனால் முடியும்.

யுஸ்பி-2 ஹை ஸ்பீடு(Hi-Speed) என அழைக்கப்பட்டது. யுஸ்பி-3 சூப்பர் ஸ்பீடு(Super Speed) என அழைக்கப்படுகின்றது. யுஸ்பி-2 ல் சப்போர்ட் செய்த அனைத்து சாதனங்களும் யுஸ்பி-3யிலும் இயங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் செப்டம்பர் மாதம் யுஸ்பி-3 சப்போர்டானது லினக்ஸ் கெர்னலில் (linux kernel)இணைக்கப்பட்டுவிட்டது. வின்டோசும் அதற்கான வேலைகளில் களம் இறங்கியுள்ளது. நாம் யுஸ்பி-3க்கு மாறும்காலம் வெகுதொலைவில் இல்லை. மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இப்போதே யுஸ்பி-3 சப்போர்ட் (support)செய்ய கூடிய சாதனங்கள் வர துவங்கிவிட்டன.

Sunday, April 10, 2011

C புரோகிராமிங் பகுதி-2

ஹைகை லெவல் லாங்குவேஜ்(High Level Language)
இது படிப்பதற்கும் புரிந்து கொள்ளுவதற்கும் எளிதாக இருக்கும்.
புரோகிராமர்கள் எளிதில் புரிந்துகொண்டு கோடு எழுத வழிமுறைகளை(syntax) கொண்டுள்ளது. இதில் எழுதப்பட்ட புரோகிராமை மெஷின் கோடாக மாற்ற கம்பைலர்(compiler) உபயோகிக்கப்படுகின்றது.

லோ லெவல் லாங்குவேஜ்(Low Level language )
இது படிப்பதற்கும் புரிந்து கொள்ளுவதற்கு சற்று கடினமானது. பொதுவாக இதனுடைய புரோகிராம் கோடானது மெமோனிக் கோடால்(mnemonic code) எழுதப்பட்டிருக்கும்.

மைக்ரோபிராசசர்(microprocessor), மைக்ரோகன்ரோலர்(micro-controller) போன்றவை இந்த லாங்வேஜை உபயோகிக்கின்றன.நேரடியாக கம்யூட்டர் ரிஜிஸ்டர்(register), நினைவகத்துடன்(memory) தொடர்புடைய கோடுகளை கொண்டது. உதாரணமாக அஸம்பிளி லாங்வேஜை(assembly language) நாம் கூறலாம். இதில் எழுதப்பட்ட கோடை மெஷின் கோடாக மாற்ற அஸம்ளர்(assembler) உபயோகிக்கப்படுகின்றது.

சி லாங்குவேஜ்(C Language)
சியானது ஒரு ஹைகை லெவல்(highlevel) லாங்குவேஜ். சியில் நாம் எளிதாக மெம்மரியை(memory) கையாலுவதால் சியானது மிடில் லெவல் லாங்குவேஜ்(middle level language) எனவும் அழைக்கப்படுகின்றது. கம்பைலர் லாங்குவெஜ்(compiler language) எனவும் அழைக்கப்படுகின்றது.

Thursday, April 07, 2011

பிரவுசர் புதிய பதிப்பு

கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தன் பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. மூன்று வார சோதனைத் தொகுப்பு காலத்திற்குப் பின் இது வெளியாகியுள்ளது. ஆறு வார காலத்திற்கு ஒருமுறை குரோம் பிரவுசர் புதுப்பிக்கப்படும் என்ற கூகுள் நிறுவனத்தின் உறுதி மொழி மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில், குரோம் பிரவுசர் முதல் முறையாக வெளிவந்தது. பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து, பயன்படுத்த முனைந்தனர். பின்னர், பழகிப்போன சில வசதிகளுக்காக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரையும் பயன்படுத்தினர். ஆனால் இந்த புதிய குரோம் 10 பயன்படுத்தத் தொடங்கினால், மற்றவற்றை நாட மாட்டார்கள் என்ற பொதுக் கருத்து இப்போது நிலவுகிறது. இந்த புதிய குரோம் பிரவுசரின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்.
முதல் அம்சமாக, மீண்டும் அதன் வேகத்தைக் கூறலாம். முதல் முதலாக வந்த குரோம் பிரவுசரைக் காட்டிலும் இதன் வேகம் பத்து மடங்கு கூடுதலாக இருப்பதாக, இதனைச் சோதித்துப் பார்த்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. Crankshaft JavaScript இதற்குத் துணை செய்கிறது. குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டினை மேற்கொண்ட போது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பதிப்பு 1,184 மில்லி விநாடிகளில் இணையப் பக்கத்தினை இறக்கிக் காட்டியது. அதே சோதனையை மற்றவற்றில் நடத்திய போது, பயர்பாக்ஸ் (பதிப்பு 3.6.15) 945 மில்லி செகன்ட்ஸ், ஆப்பிள் சபாரி 422.1 மில்லி செகண்ட்ஸ், பயர்பாக்ஸ் (பதிப்பு 4 பீட்ட 12) - 388 மில்லி செகண்ட்ஸ், புதிய குரோம் (பதிப்பு 10)321 மில்லி செகண்ட்ஸ் வேகத்தைக் காட்டின.

குரோம் பிரவுசரை இலவசமாக http://www.google.com/chrome என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் பிரவுசரைப் பயன்படுத்தக் கூடாது என்று மக்களைக் கேட்டுக் கொள்வதற்காக, ஓர் இணைய தளத்தை உருவாக்கி உள்ளது.
http://www.ie6countdown.com/ என்ற தளம் அதைத்தான் செய்கிறது. "பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரவுசர் ஒன்று பிறந்தது. அதன் பெயர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6. இப்போது அதற்கு விடை கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது' என்ற வாசகத்துடன் இந்த தளம், மக்களை இன்டர்நெட் பிரவுசர் பதிப்பு 6லிருந்து விலகிச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறது. இந்த பிரவுசரைப் பயன்படுத்துவதனால் என்ன என்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று எச்சரிக்கப்படுகிறது. ஏன் பிரவுசரை அப்கிரேட் செய்து, பின்பு வந்த பிரவுசர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று விவரமாக எடுத்துச் சொல்லப்படுகிறது.

Tuesday, April 05, 2011

தமிழ்நாடு 2011 தேர்தல்


2004 முதல் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெற்ற தேர்தலில் நின்ற வேட்பாளர்களின் விபரங்கள் இங்கே கிடைக்கின்றன. வேட்பாளர்களின் படிப்பு விபரம், சொத்து மதிப்பு( நாமினேஷன் செய்யும் போது அவர்கள் தெரிவித்தது ) மற்றும் அவர்களின் மேல் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை இவற்றையும் சுட்டி காட்டுகின்றது.

இந்த தருணத்தில் பார்க்க வேண்டிய வெப்சைட்..


தமிழ்நாடு 2011

செய்தி - தெரிஞ்சுகோங்க

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி தொலைக்காட்சியில் அதிகம் பேர் பார்த்துசாதனை
மும்பையில் கடந்தசனிக்கிழமை நடைபெற்ற இந்தியா - இலங்கை இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நாடு முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இப்போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியை, தொலைக்காட்சியில் கண்டு ரசித்தவர்கள் குறித்த ஆய்வறிக்கையை, ஆடியன்ஸ் மெஷர்மென்ட் அண்டு அனலிட்டிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை, 6 கோடியே 76 லட்சம் பேர் சராசரியாக 4 மணிநேரத்திற்கும் அதிகமாக கண்டு ரசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.டி.வி.ஆர்., எனப்படும் தொலைக்காட்சி பார்வையாளர் மதிப்பீட்டின்படி, இப்போட்டி இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு 13.7 புள்ளிகளைப் பெற்றுள்ளது. போட்டியின் இறுதிக் கட்டத்தில், இது, 21.44 புள்ளிகள் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது. நாட்டில் கேபிள் மற்றும்சாட்டிலைட் வசதி மூலம் தொலைக்காட்சி பார்க்கும் இல்லங்களில் 64சதவீத குடும்பத்தினர், இறுதிப் போட்டியை கண்டு ரசித்துள்ளனர்.உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி வரை தொலைக்காட்சியில் கண்டு ரசித்தோர் குறித்த மதிப்பீட்டின்படி, 3.7 புள்ளிகள் என்ற அளவில் குறைந்திருந்தது. இது காலிறுதியில் 5 புள்ளிகளாகவும், அரையிறுதி ஆட்டத்தில் 11 புள்ளிகளாகவும் உயர்ந்து இறுதிப் போட்டியில் 13.6 புள்ளிகள் என்றசாதனை அளவை எட்டியது. இது இதுவரை இல்லாத புதியசாதனையாகும். மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல், காமன்வெல்த் விளையாட்டு தொடக்க விழா, ஐ.பி.எல் சீசன் 3, உலகக் கோப்பை கால்பந்து போட்டி உள்ளிட்டவற்றை தொலைக்காட்சியில் பார்த்தவர்களை விட, உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்த்தவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

'டிவி'யில் அதிகம் பேர் பார்த்த ஐந்து நிகழ்ச்சிகள்

*2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - 6.76 கோடி

*2011-12 மத்திய பட்ஜெட் தாக்கல் -3.70 கோடி

*காமன்வெல்த் விளையாட்டு தொடக்க விழா - 3 கோடி

*ஐ.பி.எல்., சீசன் 3 - 96 லட்சம்

*2010 உலகக் கோப்பை கால்பந்து போட்டி - 15 லட்சம்

Sunday, April 03, 2011

வெப்சைட் - தமிழ்நாடு அரசு


தமிழ்நாடு அரசு அறிவிப்புகள் மற்றும் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்.
தமிழில் படிக்க

இங்கே டிரைவிங் லைசன்ஸ், ரேசன் கார்டு, ஜாதி சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், பிறந்தநாள் சான்றிதழ், தண்ணீர் குழாய் புது இணைப்பு, வில்லங்கச் சான்றிதழ், வருமான சான்றிதழ், பட்டா மாற்றுதல், வாகனங்கள் பதிவு சான்றிதழ், போன்றவற்றிக்கான மேலும் பல விண்ணப்பப்படிவங்களை இங்கே இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இதற்கான ஆன்லைன் சேவையும் இங்கே கிடைக்கின்றது.


இதேபோல் சென்னை மாநகராட்சியின் வெப்சைட் இதுதான்
தமிழில் படிக்க

Saturday, April 02, 2011

கூகுள் மோஷன் வீடியோ

ஏப்ரல் 1 ஆன முட்டாள்கள்தினத்தை முன்னிட்டு கூகுள் வெளியிட்ட வீடியோ தற்சமயம் தடவைக்கு 4,576,438 மேல் (3 நாட்களில்) பார்க்கப்பட்டு சக்கைபோடு போட்டுவிட்டது.. அத்தனை ஏமாளிகளா!!

இதோ வீடியோ