Tuesday, January 24, 2012

தகவல்


மாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்

இது பழைய http://tamilcomputer.blogspot.com/2011/03/9000.html பதிவின் புது தகவல்..

கணக்கில் சேர்ந்துள்ள 515 ரூபாயை கொடுக்கும்படி விண்ணப்பித்துள்ளேன். சோதனைக்கு பின்பு அனுப்புவதாக கூறியுள்ளனர். சோதனைக்கு 30 நாட்கள் எடுத்துக்கொள்வார்களாம்..


பார்ப்பதற்கு karthik MCA அவர் கமென்ட்டில் சொல்லியது போலதான் உள்ளது.  ஏதும் தகவல் இருந்தால் அடுத்த பதிவில் கூறுகின்றோம்....

Monday, January 23, 2012

பணிபுரிய சிறந்த நிறுவனம்


பணிபுரிய சிறந்த நிறுவனம்.. முதல் இடத்தில் கூகுள்.. 

இன்டர்நெட் உலகில் உலக அளவில் புகழ் நிறுவனமான கூகுள் பணிபுரிபவதற்கான சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம், ஃபார்சூன் பட்டியலில் நான்வது இடத்தில் இருந்தது.

ஆட்டம், பாட்டம், உணவு என்பதாக கூகுள் அலுவலகம் பணியாளர்களை கவர்வதாக இருக்கிறது. நியூயார்க் அலுவலகத்தில் மட்டும் சுமார் 25 கபே இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...!

அடுத்த இடங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் (12), கோல்டுமேன் சாஷெ ( 33), அடோப் (65), இன்டெல் (45), மற்றும் மைக்ரோசாஃப்ட் (76) ஆகிய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. 

Saturday, January 21, 2012

HD டிவி/வீடியோ என்றால் என்ன?


ஹை டெபனிசன் டிவி( High Definition TV ) என்பது டிஜிடல் டிவியின்( Digital TV) வரையறைக்குட்பட்டது. இதுவரை நாம் அனலாக்(Analog) எனப்படும் முறையிலேயே டிவி சேனல்களின் வீடியோகளை நம் வீட்டு அனலாக் டிவியில்(Analog TV) பார்த்து வந்தோம். தற்போது டிஜிட்டல் முறைக்கு நாம் சென்று கொண்டிருக்கின்றோம். அதாவது டிஜிட்டல் டேட்டாக்களை நேரடியாக வாங்கி நமக்கு வீடியோவை கொடுக்கக் கூடிய டிவிக்கள்( LCD, LED, Plasma  ) தற்போது வந்துவிட்டன. இதற்கு நமக்குத் தேவை HD TV மற்றும் ஹைச் டி செட்டாப் பாக்ஸ்(HD Set-top box).செட்டாப் பாக்ஸ்ல் உள்ள HDMI போர்ட் மூலம் நாம்முடைய HD டிவியானது வீடியோவை துள்ளியமாக காண்பிக்கின்றது. 

அனலாக் முறையிலான வீடியோவை நாம் AV அல்லது RF கேபிள்வழியாக டிவிக்கு இணைத்து பார்க்கின்றோம். அதேபோல் HDMI கேபிளானது HD டிவியுடன் இணைந்து துள்ளியமான வீடியோவை( Digital Video ) நமக்குத்தருகின்றது. HD டிவியில் நாம் காணும் வீடியோவில்  முந்தைய அனலாக் டிவியை விட 5 அல்லது 6 மடங்கு துள்ளியமாக காணவும் கேட்கவும் முடியும்.
HDடிவி 720p 1080i, 1080p வகையான நீள அகலமுடைய வீடியோவை நமக்கு காண கொடுக்கின்றது. அதாவது அகன்ற திரை(16:9) வீடியோவினை நாம் காணலாம்.

720p, 1080i, 1080p நீள அகலத்தை கீழே இருக்கும் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நடுவில் இருப்பது அனலாக் வீடியோ அதாவது நாம் தற்போது அனலாக் டிவிகளில் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவாகும். படத்தைப்பார்த்தாலே எவ்வளவு அளவிலான வீடியோவை HDடிவி மூலம் நாம் காணலாம் என்பது உங்களுக்குப்புரியும்.

1080i அல்லது 1080p யை காண்பிக்கத்தகுந்த டிவிகள் சந்தையில் ஏராளம். குறிப்பக 1080p ல் வீடியோ தெளிவு சிறப்பாக இருக்கும்..




HD வீடியோ பார்க்க உங்களிடம் இருக்க வேண்டியது ஹைச் டி செட்டாப்பாக்ஸ்( HD set-top box ) மற்றும் அதற்கான HD டிவி, HDMI கேபிள். HD செட்டாப் பாக்ஸ் அதிக கொள்ளளவு உடைய டிஜிட்டல் வீடியோவை( HD Video ) HD டிவிக்கு கொடுக்கின்றது. HD டிவியானது அதனை நமக்கு காண்பிக்கின்றது. மேலும் HD சேனலில் 5.1 ஆடியோ(audio) வசதியும் உண்டு.

Friday, January 20, 2012

விளையாட்டு வெப்சைட்



 wowin.com இது ஒரு கேம் வெப்சைட். இதில் சில பிளாஷ்(flash game) விளையாட்டுக்கள் உள்ளன. இதை அதிகமாக விளையாடுவோர், போட்டியில் வெற்றி பெற்றோர், அதிக புள்ளிகள் பெற்றோர் என பரிசுகளை வழங்குகின்றது.பல திறமையான போட்டியாளர்களை மீறி வெற்றி பெறுபவர்களுக்கு 50, 100 டாலர்( US Dollers ) என பரிசுகளை வழங்குகின்றது. முடிந்தால் முயற்சி செய்துபாருங்கள். இதற்கென ஒரு தனி நுழைவுச் சொல்லை நீங்கள் உருவாக்க வேண்டும்.



Wednesday, January 18, 2012

யுனிக்ஸ்(UNIX) கட்டளைகள்

pwd தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் கோப்பகத்தைக் காட்டுகிறது
உபயோகிக்கும் முறை,
$pwd

mkdir ஒரு புதிய கோப்பகத்தை உருவாக்குகிறது
உபயோகிக்கும் முறை,
$mkdir test

cd கோப்பகத்தை மாற்றிக் கொள்ள உதவுகிறது
உபயோகிக்கும் முறை,
$cd test

rmdir ஒரு வெற்றுக் கோப்பகத்தை நீக்குகிறது
உபயோகிக்கும் முறை,
$rmdir test

rm கோப்புகளை நீக்கப் பயன்படுகிறது
உபயோகிக்கும் முறை,
rm test.txt


man ஒரு கட்டளைக்கான உதவிக் கையேட்டைக் காட்டுகிறது
உபயோகிக்கும் முறை,
$man ls

ls கோப்பகங்களையும் கோப்புகளையும் பட்டியலிட உதவுகிறது
உபயோகிக்கும் முறை,
$ls

find கோப்புகளையும் கோப்பகங்களையும் அவற்றின் பெயர் கொண்டு தேட உதவுகிறது
உபயோகிக்கும் முறை,
$find test.txt

cp கோப்புகளை நகலெடுக்க உதவுகிறது.
உபயோகிக்கும் முறை, 
$cp test.txt test1.txt

mv கோப்புகளை நகர்த்தவும் மாற்றுப்பெயரிடவும் உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$mv test.txt test2.txt

cat கோப்புகளை ஒன்றிணைக்க, புதிய கோப்பை உருவாக்க, ஏற்கனவே உள்ள கோப்பைத் திறந்து பார்க்க உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$cat test.txt

df வட்டில் உள்ள காலியிடத்தை அறிய உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$df

du வட்டின் பயன்படுத்தப்பட்ட இடத்தை அறிய உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$du

more கோப்புகளைப் பக்கம் பக்கமாகப் பார்க்க உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$more test.txt

less கோப்பின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்க உதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$less test.txt

head கோப்பின் முதல் 10 வரியை மட்டும் பார்க்கவுதவுகிறது.
உபயோகிக்கும் முறை,
$head test.txt

tail கோப்பின் இறுதி 10 வரியை மட்டும் பார்க்கவுதவுகிறது.,
உபயோகிக்கும் முறை,
$tail test.txt

history ஏற்கனவே செயலாக்கப்பட்ட கட்டளைகளைக் காட்டுகிறது.
உபயோகிக்கும் முறை,
$history

Saturday, January 14, 2012

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

வாழ்வில் இன்பம் மென்மேலும் பொங்கிட
பொங்கட்டும் பொங்கல்..
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இதுதான் ஈ-புக்( e-book )


இதுதான் 'e-book' டவுன்லோட் பண்ணி படிக்கனும்னா படிச்சுக்கோங்க..

Wednesday, January 11, 2012

ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகள்..!


உலக அளவில் இணைய தளத்தை பயன்படுத்துபவர்களில் சுமார் 55% பேர் ஃபேஸ் புக்கில் கணக்கு வைத்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில், ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகளும் இருக்கின்றன.

பிரெசில் நாட்டில் இன்றைக்கும் ஆர்க்குட் தான் ராஜாவாக இருக்கிறது.

ஜப்பானில் ஃபேஸ் புக்கை பின்னுக்கு தள்ளிவிட்டு டூவிட்டர் குருவி முதல் இடத்தில் இருக்கிறது

போலந்தில் நாஸ்சா கியாசா என்கிற சமூக வலைதளம் பிரபலம்

வியட்னாலில் ஃபேஸ் புக் அதன் ஆதரவை படிப்படியாக இழந்து வருகிறது.

நம் போட்டி நாடான சீனாவில் சமூக இணைய தளங்களுக்கு அனுமதி இல்லை என்பதால்.... அங்கு ஃபேஸ் புக்... இல்லை.

Tuesday, January 03, 2012

யூ டியூப் HD 2.6.1 டவுன்லோடர்


இது ஒரு இலவச டூல்( freeware tool ).. தளத்தில் இருந்து அதிக கொள்ளளவு  கொண்ட் வீடியோவை எளிதில் தரவிரக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தரவிரக்கம் செய்யத வீடியோவை AVI பார்மேட்டுக்கோ(format) அல்லது MP4 பார்மேட்டுக்கோ(format) மாற்றிக்கொள்ளலாம்.

டவுன்லோட் லிங்க்
http://www.filesonic.com/file/oQlgFSD