Saturday, March 24, 2012

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி - 4


artificial network  – செயற்கை வலையமைப்பு
ascende – மேற்கூறு
ascending order  – ஏறுமுகம்
ASCII - American national Standard Code for
Information Interchange  – என்பதன் குறுக்கம்: ஆஸ்கி
aspect card – விவரணை அட்டை
aspect ratio -  வடிவ விகிதம்
ASR - Automatic Send/Receive - என்பதன் குறுக்கம்: தன்னியக்க அனுப்பு/பெறு
assemble  - தொகு
assembler – பொறிமொழியாக்கி
assembler directive – தொகுப்பாணை
assembly - தொகுப்பு
assembly language – பொறி மொழி
assembly listing  - தொகுப்புப் பட்டி

Thursday, March 22, 2012

கம்ப்யூட்டர் சிரிப்பு


நபர்1: மாப்பிள்ளை ‘போட்டோ ஷாப்’ வச்சுருக்காருனு சொல்லி நம்பவச்சு கழுத்தறுத்துட்டாங்க..

நபர்2: ஏன் என்னாச்சு?!

நபர்3: இப்ப அவரு வச்சுருக்குறது கம்ப்யூட்டர்ல ‘அடோப்’ போட்டோ ஷாப்பாம்..

தகவல்


மாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்

இது பழைய http://tamilcomputer.blogspot.in/2012/01/blog-post_24.html பதிவின் புது தகவல்..

" கணக்கில் சேர்ந்துள்ள 515 ரூபாயை கொடுக்கும்படி விண்ணப்பித்துள்ளேன். சோதனைக்கு பின்பு அனுப்புவதாக கூறியுள்ளனர். சோதனைக்கு 30 நாட்கள் எடுத்துக்கொள்வார்களாம்.. "

சோதனைக்குப் பின் ரூபாய்.395.51 உள்ளதாக தெரிவித்து உள்ளார்கள்..ஆனாஅது ஏன்னு சொல்லல..எங்க போச்சு 119.49 ரூபாய் ???!!!

 இத நம்பலாமா நம்பக்கூடாதா..தெரியலேயேபா..

-தொடரும்....



மோசில்லாவின் பாயர்பாக்ஸ்(Mozilla Firefox ) 11 புதிய பதிப்பு கிடைக்கின்றது.
http://www.mozilla.org/en-US/firefox/new/


Monday, March 12, 2012

விண்டோஸ் 8


மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பின் சோதனைத் தொகுப்பினை, சென்ற பிப்ரவரி 29 அன்று, நுகர்வோர்களுக்கு வெளியிட்டுள்ளது. வெளியான முதல் நாளே, பத்து லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இத்தொகுப்பு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.


1. ப்ராசசரின் இயக்க வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ் அல்லது அதற்கும் மேலாக.
2.கம்ப்யூட்டர் 32 பிட் எனில் ராம் மெமரி 1 ஜிபி; 64 பிட் எனில் ராம் மெமரி 2 ஜிபி குறைந்தது இருக்க வேண்டும்.
3. எப்போதும் தேவையான காலி டிஸ்க் இடம், 32 பிட் எனில் 16 ஜிபி. 64 பிட் எனில் 20 ஜிபி.
4. டைரக்ட் எக்ஸ்9 கிராபிக்ஸ் டிவைஸ் WDDM 1.0 உடன் இருக்க வேண்டும். அல்லது இதனைக் காட்டிலும் உயர்வாக இருக்க வேண்டும்.

விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் சில வசதிகளைப் பயன்படுத்த, சில கூடுதல் ஹார்ட்வேர் தேவைகள் அவசியம். அவை, Snap feature பயன்படுத்த வேண்டும் எனில், உங்கள் கம்ப்யூட்டரின் ரெசல்யூசன் குறைந்த பட்சம் 1366x768 என இருக்க வேண்டும். நீங்கள் தொடுதிரை பயன்பாட்டினை மேற்கொள்வதாக இருந்தால், மல்ட்டி டச் ஏற்கக்கூடிய லேப்டாப், டேப்ளட் அல்லது டிஸ்பிளே திரை கொண்ட மானிட்டர் இருக்க வேண்டும். விண்டோஸ் 8 சிஸ்டம், ஒரே நேரத்தில் ஐந்து டச் பாய்ண்ட்களை இயக்கும் திறன் கொண்டது என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். விண்டோஸ் ஸ்டோர் பயன்படுத்த கட்டாயம் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும்.