Tuesday, September 11, 2012

விண்டோஸ் 7 ஸ்னிப்பிங் டூல்


இது விண்டோஸ் 7 உடன் இலவசமாக கிடைக்கின்றது. ஸ்கிரின் ஸாட்(screen shot) எடுப்பதற்கு இது மிகவும் உதவுகின்றது. 

இதனை விண்டோஸ் சர்ச்ல்(search) “Snipping Tool“ என தேடினால் காணலாம். இதனை கிளிக் செய்து வரும் மெனுவில் நியு(new) என்பதை தேர்வு செய்து ஸ்கிரினின் எந்த பகுதியையும் நீங்கள் விரும்பும் அளவு கேப்சர்(capture) செய்யலாம்.

 மேலும் இதனை JPEG, GIF, PNG, HTML வகைகளில் படங்களாக சேமிக்கலாம். மேலும் ஹைலைட்(highlight) மற்றும் பேனாவால்(pen) ‌வரையும் வசதி இ-மெயில் அனுப்பும் வசதியும் உள்ளது.

கூகிள் அலர்ட்


கூகிளிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் குறிப்பிட்ட தேடு தகவலை( search info ) தினமும் பெற விருப்பமா? அந்த தேடுதல் விடையானது உங்களுடைய மெயில் பாக்ஸில் வந்தால் எப்படி இருக்கும்..அதற்காகதான் “கூகிள் அலர்ட்“.. 

நீங்கள் இங்கே http://www.google.com/alerts சென்று உங்களுக்கு வேண்டிய தேடலின் வாக்கியத்தையோ அல்லது வார்த்தையையோ நீங்கள் உள்ளீடு செய்துவிட்டு அப்படியே உங்கள் இ-மெயில் ‌‌ஜடியையும் கொடுத்துவிடுங்கள்.. 
உங்களுக்கு மெயில் தினமும் வரவேண்டுமா அல்லது வாரம் ஒருமுறை வேண்டுமா  அல்லது நீங்கள் கொடுத்த தேடுதலுக்கு விடை கிடைத்ததும் மெயில் வரவேண்டுமா என தேர்வு செய்து கொள்ளலாம்..

மேலும் நீங்கள் எதிர்பார்க்கும் தேடுதல் வீடியோ(video) வடிவி‌லா அல்லது செய்தி(news) வடிவிலா அல்லது பிளாக்(blog), புத்தகம்(book) வடிவிலா என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம்..

உதாரணமாக ”Programming in C” என்று உள்ளீடு செய்துவிட்டால்..இதைப்பற்றிய செய்தி புதிதாக கிடைத்தால் உடனே கூகிள் நமக்கு மெயில் செய்து விடும்..

Sunday, September 09, 2012

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி - 5


assignment statement - மதிப்பளிக் கூற்று
associative storage - தொடர்பு நினைவகம்
asterisk - உடுக்குறி
asynchronous - ஒத்தியங்கா
asynchronous communication- ஒத்தியங்காத் தொடர்பு
asynchronous computer - ஒத்தியங்காக் கணிப்பொறி
asynchronous input - ஒத்தியங்கா உள்ளீடு
asynchronous transmission- ஒத்தியங்காச் சேலுத்தம்
atomic - அணுநிலை
attenuation - ஒடுங்கல்
attribute - பண்பு
audio - ஒலியுணர்
audio cassette - ஒழிப்பேழை
audio device - ஒலியுணர் சாதனம்
audio output - ஒலியுணர் வெளியீடு
audio response device - ஒலியேற்ப்பு சாதனம்

தவிர்க்கவும்


முன்பு paisalive வெப்சைட்டைப்பற்றி இந்த http://tamilcomputer.blogspot.in/2011/03/9000.html லிங்க்கில் குறிப்பிட்டு இருந்தோம்..
தற்போது எனது அனுபவம் மற்றும் உப‌யோகித்தோ ரின் அனுபவங்களை வைத்து பார்க்கும் போது இந்த சைட்டில் கூறிஉள்ளவாரு வருமானம் பெற இயலவில்லை ஆகையால் இந்த ‌வெப்சைட்டை மேலும் யாரும் உபயோகிக்க வேண்டாம் என்று ஆலோசனை கூறுகின்றோம்... இந்த பதிவை இத்துடன் முடித்துகொள்கின்றோம்..