Wednesday, June 19, 2013

ஆபிஸ் மொபைல்

மைக்ரோ சாப்ட் நிறுவனம் ஆப்பிள் ஐ-போன்க்கு என தனித்துவம் வாய்ந்த அப்பிளிகேஷனை தயாரித்துள்ளது. அதுதான் ஆபிஸ் மொபைல்(Office Mobile). இதனை  உபயோகிக்க  “ஆபிஸ் 365“ல் தனி கணக்கு வைத்திருக்க‌ வேண்டும். இந்த வசதி 1 மாதத்திற்கு இலவசமாகவும் அதற்கு மேல் பணம் கட்டி தொடரவும் என மைக்ரோசாப்ட் கூறுகின்றது. இந்த அப்ளிகேஷன் மூலம் மைக்ரோசாப்ட் வேர்டு(MS-WORD),   மைக்ரோசாப்ட் பவர்பாய்ண்ட்(POWER POINT), எக்ஸல் ஷீட்(EXCEL SHEET) என அனைத்தையும் ஐ-போன் வழியாக உபயோகிக்கலாம்.

ஆபிஸ் 365 கணக்கு தொடங்க

அப்ளிகேஷன்

கீழ்காணும் ஆப்பிள் சாதனங்கள் மட்டும் இந்த அப்ளிகேஷனை உபயோகிக்கமுடியும்.

  • iPhone 4
  • iPhone 4S
  • iPhone 5
  • iPOD Touch( 3,4,5 generation )
  • iPad mini
  • IOS 6.1


இது போக மைக்ரோசாப்ட் ஆப்பிள் சாதனங்களுக்கென கீழ்காணும் அப்ளிகேஷன்களை தயாரித்துள்ளது..

  • skydrive
  • microsoft onenote
  • photo synth
  • wordament

Saturday, June 08, 2013

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-8

auxiliary equipment - துணைக் கருவி
auxiliary function - துணை செயல்கூறு
auxiliary memory - துணை நினைவகம்
auxiliary operation - துணைச் செயல்பாடு
auxiliary storage - துணைத் தேக்ககம்
availability - கிடைத்தல்
available time - கிடைக்கும் நேரம்
average search length - சராசரித் தேடு நீளம்
axes - அச்சுகள்
babble - பிறழ்ச்சி
back panel - பின்புறப் பலகம்
back plane - பின்தளம்
back space - பின்நகர்வு