Sunday, January 25, 2015

குடியரசு தின நல்வாழ்த்துகள்


கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-15

blow up - மிகை உப்பல்
board - பலகை
bold facing - தடிப்பாக்கம்
bold printing - தடித்த அச்சடிப்பு
book keeping - கணக்கு வைப்பு
bolean algebra - பூலியன் யற்கணிதம்
boolean expression - பூலியன் கோவை
boolean operator - பூலியன் வினைக்குறி
boot - தொடங்குதல்
boot strapping- தொடக்கம்
boot virus- தொடக்க நச்சு நிரல்
bore - துளை
borrow - கடன் பெறு
BOT - Beginning of Tape என்பதன் குறுக்கம்: நாடாவின் தொடக்கம்
bottleneck - டர்
bottom-up technique - மேல் எழு தொழில்நுட்பம்
bound - கட்டுண்ட
brainwave interface - மூளைஅலைஇடைமுகம்
branch - பிரிதல்,கிளை

Wednesday, January 14, 2015

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


தை பிறந்தால் வழி பிறக்கும்..
அவ்வழி நல்வழியாக அமைய 
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
பொங்கட்டும் மகிழ்ச்சி..

கூகிள் பிளைட் சர்ச்சை

புதிய வசதியான பிளைட்(flight) சர்ச்சை கூகிள் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவை மூலம் கூகில் பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து மற்ற எந்த நகரங்களுக்கும் பயணிப்பதற்கான விமான சேவையை அடையாளம் காட்டுகிறது. பிளைட் சர்ச் பக்கத்திலேயே பயனாளிகளின் இருப்பிடம் ( உதாரணம் சென்னை) என சுட்டிக்காட்டப்படுகிறது. அருகே உள்ள இடத்தில் பயண இடத்தை டைப் செய்தால் அந்த நகருக்கான விமான சேவைகளை பட்டியலிடுகிறது. பயண நாளையும் குறிப்பிட்டு தேடலாம். சுற்றி வளைத்து போகாமல் நேராக செல்லும் விமானங்களையே முதலில் பட்டியலிடுகிறது. தேவை எனில் விரிவாக்கி கொள்ளலாம். அதில் கட்டணம் அதிகம் உள்ள சொகுசு சேவைகளும் இடம்பெற்றிருக்கும்.
https://www.google.co.in/flights/

Friday, January 09, 2015

சோனி வாக்மேன்zx2

தற்போது மீண்டும் வாக்மேன்zx2 என்ற பெயரில் ஆடியோ பிளேயரை ஆன்ட்ராய்டு உபயோகத்துடன் அறிமுகம் செய்துள்ளது சோனி நிறூவனம்.

இது ஐபேடுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்பாக விளங்குகிறது. அதன் சிறப்பம்சங்கள் என்னவெனில் இதன் நினைவக திறன் இன்டர்னல் மற்றும் எக்ஸ்டர்னல் இரண்டுமே 128 ஜிபி என்ற அளவிலும், என்எஃப்சி மற்றும் ப்ளூடூத் ஈனைப்பு ஆகிய வசதியுடன் உள்ளது.

இதில் எம்பி3, டபிள்யூஎம்ஏ, லீனியர் பிசிஎம் ஆகிய ஃபைல்களை பயன்படுத்தும் விதமாக இது உள்ளது மேலும் இதனை எளிதாக கணினியில் இணைத்து பாடல்களை பதிவேற்ரம், மற்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் பேட்ட்ரி அமைப்பு 3 மணிநேரம் சார்ஜ் செய்தால் 32 மணி நேரம் நீடிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் இயங்குதளம் ஆண்ட்ராய்டு 4.1 ஆகும். இதன் எடை 139 கிராம் என்று கூறப்படுகிறது.

முன்பு ஒளிநாடா அமைப்பில் இருந்து மாறி தற்போது டிஜிட்டல் வசதிகளுடன் மெமெரி கார்டு மற்றும் யூஎஸ்பி அமைப்புடன் வெளிவருவது இதன் சிறப்பம்சமாக உள்ளது. ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபாடிற்கு இது சரியான போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் விலை என்பது அதிகமாக இருப்பதால் இதனை நடுத்தர மக்கள் வாங்குவது சிரமம் என்கிரார்கள். ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ள இந்த வாக்மேன் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவில் இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 53000 ரூபாயாக உள்ளது.