Sunday, February 12, 2017

கூகுள் குரோம் பிரவுசர் தரும் அறிவிப்புகளைத் தடுக்க

இந்த பாப் அப் கட்டச் செய்தியினை கூகுள் குரோம் பிரவுசரில் தடை செய்திட, கீழ்க்காணும் செயல்முறைகளைப் பின்பற்றவும். குரோம் பிரவுசரை இயக்கி, மேலாக, வலது மூலையில் கிடைக்கும் மெனு பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில், 'Settings' தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பட்டியலில் கீழாக உள்ள, “Show Advanced Settings” என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர், Privacy என்ற பிரிவில், “Content Settings” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்படும், Notifications என்ற பிரிவில், கீழாகச் சென்று, “Do not allow any site to show notifications” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுத்து அமைத்த பின்னர், ஏற்கனவே நீங்கள் அனுமதி கொடுத்த இணைய தளங்களிலிருந்து அறிவிப்புகள் வந்து கொண்டு தான் இருக்கும். இதற்கு “Manage Exceptions” என்பதில் கிளிக் செய்து, அதில் நீங்கள் அனுமதி அளித்துள்ள இணைய தளங்களின் பெயர்ப் பட்டியலைக் காணலாம். அதில் தரப்பட்டுள்ள அனுமதியை, நீங்கள் விரும்பினால் ரத்து செய்திடலாம். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இணைய தளத்திற்கு மட்டும் இத்தகைய அறிவிப்புகள் தருவதற்கு நீங்கள் அனுமதி தர வேண்டும் என எண்ணினால், இந்த “Manage Exceptions” என்ற பிரிவிற்குச் சென்று, அதற்கான அனுமதியைத் தரலாம்.